சௌம்யா ஆனந்த்
“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று “.
என்ற திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்றவாறு நம்மிடையே வாழ்ந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாமிற்கு இது ஒரு சமர்ப்பணம்.
சமுத்திரக் கரையில் தென்கோடியில் பிறந்தார்;
கடல் மீன்களை பிடிக்கும் மக்களிடையே பிறந்து விண்மீன்களை பிடிக்க ஆசைப்பட்டார் :
கடலுக்குள் படகுகளை அனுப்பியவர்கள் நடுவில் வாழ்ந்து ஏவுகணைகளை அனுப்பினார் ;
பாடங்களை தன் தாய்மொழியிலேயே கற்றார்;
இளமையிலேயே வறுமையை உணர்ந்தார்;
தாய் தந்தையை நேரில் சென்று பார்ப்பதற்காக ஒரு முறை தனக்குப் பரிசு கிடைத்த புத்தகத்தை விற்க துணிந்தார்;
மனிதர்களின் மனங்களையும் அவர்களின் வாழ்வியலையும் கற்றார்;
முதன்முதலில் இந்திய ராணுவத்திற்கு ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்தார்;
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (எஸ். எல். வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார்.
பல சாதனைகளை பொறியியல் துறையில் செய்தார் ;
பல பாராட்டுகளையும் பட்டங்களையும் பெற்றார் ;
அணு ஆயுத பரிசோதனையில் முக்கிய பங்காற்றினார்;
நம் இந்திய தேசத்தின் மிகச்சிறந்த விஞ்ஞானியாக வலம் வந்தார்;
இந்திய அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றினார் ;
கர்வம் இல்லாமல் ஆர்வத்துடன் நம்பிக்கையுடன் பல பணிகளை செய்தார்;
பொக்ரான் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைக்கு பல ஆலோசனை வழங்கினார்;
அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகளை உருவாக்க உதவினார்;
ஊனமுற்ற குழந்தைகளுக்கு தன் “ராக்கெட் சயின்ஸ்” மூலம் தன்னுடைய குழுவின் படைப்பால் அவர்களின் செயற்கை கால்களுக்கு எடை குறைத்தார் அவர்களின் பெற்றோர்களின் மன சுமை குறைத்தார்;
இதய சிகிச்சைக்கு , கார்டியாலஜிஸ்ட் சோமா ராஜு உடன் சேர்ந்து”கலாம் -ராஜு ஸ்டென்ட்” உருவாக்கினார் ;
” கலாம் ராஜூ டேப்லெட் ” என்ற ஒரு டேப்லட் கணினியை கிராமப்புறங்களில் உள்ள ஆரோக்கிய நல பராமரிப்புக்கு வடிவமைத்தார்;
பல புத்தகங்களை எழுதி இளைய சமுதாயத்தை வழிநடத்தினார் ;
ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார் ;
“அக்னி சிறகுகள்” என்ற சுயசரிதையில் பல நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் மாணவர்களின் மனதில் விதைத்தார்;
இசை, கலை ,ஓவியம் போன்றவற்றையும் பயின்றார்;
கவிதைகளும் எழுதினார் வீணையை நீட்டினார்;
2002 இந்தியக் குடியரசின் 11வது ஜனாதிபதியாக “மக்களின் ஜனாதிபதி” என்று மக்களால் அன்பாக அழைக்கப்பெற்றார்;
மக்கள் அனைவரின் மனதிலும் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தார்;
இந்திய அரசு வழங்கிய”பத்ம பூஷன்” “பத்ம விபூஷண்” விருதுகளை பெற்றார்;
உலகளவில் பல டாக்டர் பட்டங்களையும் பெற்றார்;
நம் நாட்டின் மிகப்பெரிய விருதான” பாரத ரத்னா”வையும் பெற்றார்;
தன்னுடைய 79 ஆவது பிறந்த நாளை “உலக மாணவர் தினமாக” ஐக்கிய நாடுகள் அவையில் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்;
சிறு பரிசுகளையும் கூட ஏற்க மறுத்தார் ;
அனைத்து மதங்களையும் சமமாக பார்த்தார்;
ஒரு சிறு புள்ளியில் இருந்து ஒரு உயிரை உருவாக்கும் தாயைப் போல் ஒரு அணுவைப் பிளந்து பலவற்றை உருவாக்கினார் அவர் நம்முடைய அறிவியல் தாய் ஆனார்;
சூரியன் உதிக்கும் சமுத்திரக் கரையில் தோன்றினார்;
பல புகழை பெற்றார் புகழின் உச்சிக்கு சென்றார் ;
அவர் நினைத்தது போலவே மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது வடகோடி மலை உச்சியில் உயிர் நீத்தார்;
அவர் என்றுமே சூரியனைப் போலவே பிரகாசித்துக் கொண்டிருப்பவர்;
ஏன் இறைவா , “ஒரு புது உலகம் உருவாக்கி அதற்கு நல்ல மனிதன் தேவை என்று நீ எங்களிடம் இருந்து” ஏவுகணை மனிதனை” அழைத்து கொண்டாயோ”.??
அவர் வாழ்ந்த மண்ணில் வாழ நாம் பெருமையும் கர்வமும் கொள்ள வேண்டும்.
“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு “
“நீங்கள் உறங்கும்போது வருவது கனவல்ல ,உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு என்று கூறினார்;
2020ல் இந்தியா வளர்ந்த நாடாக வல்லரசு நாடாக திகழ, நம்முடைய இளைய சமுதாயத்தின் துணையுடன் திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020இல் வல்லரசு நாடாக மாறிவிடுவோம் கூறியதை போல் நடக்க இந்த இளைய சமுதாயத்தை நாம் தயாரிக்கவேண்டும்.
“எண்ணிய எண்ணியாங்கு எழுது எண்ணியர்
திண்ணியராக பெறின்,
கலாம் இந்திய தேசத்திற்கு பூசிய அறிவு முலாம், விண்ணிலும் மண்ணிலும் என்றுமே ஜொலிக்கும், உங்களுக்கு எங்கள் சலாம்”!!!
கலாம் அவர்களின் பிறந்தநாள் அக்டோபர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அவரின் பெருமைகளை இளைய சமுதாயத்திடம் உரைப்பது நம் அனைவரின் பொறுப்பு.
வளர்க பாரதம்!! வாழ்க பாரதம்!!
சௌமியா ஆனந்த், நவி மும்பை.
Long time supporter, and thought I’d drop a comment.
Your organization’s wordpress site is very sleek – hope you don’t mind me asking what theme you’re using?
(and don’t mind if I steal it? :P)
I just launched my small businesses site –also built in wordpress like yours– but the
theme slows (!) the site down quite a bit.
In case you have a minute, you can find it by searching for “royal cbd” on Google (would appreciate any
feedback) – it’s still in the works.
Keep up the good work– and hope you all take care of yourself during the coronavirus
scare!
~Justin
We are using ELEMENTOR plugin
Thank you
Hello, after reading this remarkable paragraph i am too delighted to share my know-how here with mates.
Please mail us your ideas
infoATnmtamisangamDOTorg
Thank you
This is a very good tip particularly to those new to the blogosphere.
Simple but very precise info… Many thanks for sharing this one.
A must read post!
P.S. If you have a minute, would love your feedback on my
new website re-design. You can find it by searching for
“royal cbd” – no sweat if you can’t.
Keep up the good work!