திருக்குறள்

குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம் 1: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
விளக்கம் 2: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

திருத்தப்பட்ட சட்டவரைவு அறிக்கை

திரு சோமசுந்தரம் தலைமையிலான துணைச் சட்டத் திருத்தக் குழு, உறுப்பினர்கள் திரு வி ஆர் பி கிருஷ்ணமூர்த்தி, திரு கே வெங்கட்ராமன், திரு மனோகரன் மற்றும் திரு நடராஜன் ஐயர் ஆகியோருடன் இணைந்து அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகக் குழுவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

தற்போதைய துணைச் சட்டம், முன்மொழியப்பட்ட மாற்றங்கள், புதிய வரைவு மற்றும் மாற்றத்திற்கான காரணம் ஆகியவற்றின்
முழு விவரங்களையும் ஆங்கில அறிக்கை வழங்குகிறது.
தமிழ் அறிக்கை புதிய வரைவு துணைச் சட்ட முன்மொழிவை வழங்குகிறது.

இந்த இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் விவரங்களை நிரப்புவதன் மூலம் அறிக்கையை பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் உள்ளூர் சாதனத்தில் வரைவு

 அறிக்கையைப் பதிவிறக்க, QR குறியீட்டையும் ஸ்கேன் செய்யலாம்
QR code to download Bye-law draft

அறிக்கையைப் பதிவிறக்க இந்த

 இணைப்பைக் கிளிக் செய்யவும் –>> (link.sgsubra.co.in/BLF4NMTS )

அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தமிழ் பாடப்புத்தங்களின் விநியோகம்

அன்புடையீர் இனிய காலை வணக்கம். கடந்த ஆறு ஆண்டுகளாக நமது நவிமும்பை  தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு அரசிடமிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தமிழ்ப் பாடப்புத்தகங்களை நன்கொடையாகப் பெற்று அவற்றை சங்கத்தின் செலவில் மும்பைக்கு கொண்டு வந்து மும்பை ,தானே, புனே, நாக்பூரில் உள்ள தனியார் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது

இந்த  ஆண்டுக்கான புத்தக வினியோக நிகழ்வு 21-7-21 அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.  

இந்த நிகழ்வு  கன்னட சங்க வளாகத்தில் (நமது சங்கத்தில் விரிவாக்கப் பணி நடைபெறுவதால்அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நிகழ்ந்தது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் 🙏

செயலாளர்

நவிமும்பை தமிழ்ச் சங்கம்

வரலாறு

நவிமும்பை தமிழ்ச் சங்கம் 1976ஆம் ஆண்டு, இந்தியாவின் மராத்திய  மாநிலத்தில், நவிமும்பை பகுதியில் உள்ள வாஷியில், துவங்கப்பட்ட   தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். மிக எளிய முறையில் முப்பது அங்கத்தினர்களைக் கொண்ட அமைப்பாகத்  தொடங்கப்பட்ட இச்சங்கம்  தற்போத ஏறத்தாழ 800 அங்கத்தினர்களைக் கொண்ட பேரமைப்பாக வளர்ந்துள்ளது… மேலும் வாசிக்க…

ஊரடங்கிலும் தமிழ்க் கல்வி வளர்த்தோம்!

ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட நிலையிலும் நமது சங்கத்தின் தமிழ் மொழி
வளர்ப்புச் சேவை தொடர்ந்து நடைபெற்றது. நமது ஆயுட்கால உறுப்பினர் திரு.
சங்கரநாராயணன் (ஆ.உ.எ.720) அவர்களது மனைவியாரான திருமதி கனகவல்லி அவர்கள்
கரோனா சோதனைக் காலத்தை தமிழ் வளர்ப்பு சாதனைக் காலமாக மாற்றி அமைத்துக்
கொண்டார். அவர் இணைய தளம் மூலம் தமிழ் மொழி வகுப்புகள் எடுத்து , மும்பை
நவிமும்பையைச் சேர்ந்த 22 மாணவர்களை , ஜூன் மாதம் நமது சங்கத்தின் தமிழ் இணையக்  

 மேலும் வாசிக்க….

 

இன்றைய செய்திகள்

There are currently no events.