தோற்றம். 

மராத்திய மாநிலத்திற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின்  கலாச்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மராத்திய குடிமக்களுக்கு சேவை செய்யவும் 1976ஆம் ஆண்டு , மராத்திய மாநிலத்தின் நியூ பம்பாயில்  ( தற்போதைய  நவி மும்பையில் தமிழ் ஆர்வலர்களின் சிறிய  குழு ஒன்று ‘ நியூ பாம்பே தமிழ் சங்கம்’  (தற்போதைய நவிமும்பை தமிழ்ச்சங்கம்) என்ற கலாச்சார அமைப்பை  வாஷி பகுதியில் தோற்றுவித்தது. 30 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட நவிமும்பை தமிழ்ச்சங்கம் தற்போது ஏறத்தாழ 900 ஆயுட்கால உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தொடக்கத்தில் மிக எளிய முறையில் அமைந்திருந்த சங்க  வளாகம்,  சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டான 2002இல் சங்கத்தின் நிர்வாகக்குழு, அறங்காவலர் குழு ஆகியவற்றின் பெருமுயற்சியாலும் மாநிலத்தின் தமிழ் ஆர்வலர்களின் உதவியாலும் மேம்படுத்தப்பட்டது. இதை 27-1-2002இல் மராத்திய மாநிலத்தின் முதன்மை செயலாளராக பதவி வகித்திருந்த திரு. ரங்கநாதன் இ.ஆபஅவர்கள் திறந்து வைத்தார். .சங்கத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த 2020ஆண்டு கட்டடத்தின் புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று  நிதி நெருக்கடி போன்ற பல தடைக்கற்களைத் தாண்டி சங்கத்தின் அறங்காவலர் குழுவும் கட்டிட விரிவாக்கக்குழுவும் முனைந்து செயல் பட்டு புனரமைப்பு மற்றும் விரிவக்கப்பணியை நிறைவு செய்தன.. இந்தப் புனரமைப்புக்கு தமிழ் நாடு அரசின் தாராளமான நிதியுதவியும் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் நன்கொடையும் பெரிதும் உதவின. .புனரமைக்கப்பட்ட கட்டடத்தை தமிழ்மொழி வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ம.பொ. சாமினாதன் அவர்கள் 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ,23ஆம் தேதி திறந்து வைத்தார்.

முக்கிய நோக்கங்கள்

  1. தமிழ் மொழி, இலக்கியம்,பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும்  நுண்கலைகளைப் பேணிப் பாதுகாத்தல்
  2. பிற மொழிகளைக் கற்க ஊக்குவித்தல்.
  3. சங்க நிதியிலிருந்து அல்லது பொதுமக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட நன்கொடைத் தொகையிலிருந்து தகுதி வாய்ந்த மாணவர்களுக்கும் நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்குதல்  பரிசுகள் வழங்கல், பயிற்சிகால உதவித்தொகை வழங்குதல், போன்ற செயல்களை மேற்கொள்தல்
  4.  நூலகம் மற்றும் வாசிப்பு அறைகளை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அமைத்தல்
  5. சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்ற உதவும் வகையில்  சங்கத்தின் அசையா சொத்துக்களை நிர்வகிக்க ஏதேனும் ஒரு அறக்கட்டளையை உருவாக்குதல்
  6. சங்கக் கோட்பாடுகளுக்கு இசைந்த வகையில் பொது அமைப்புகளுக்கு  நன்கொடைகள் வழங்குதல்
  7. நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் அறம் சார்ந்த நற்தொண்டுகளை ஆற்றுதல்

ிர்வாகம்

நவிமும்பை தமிழ்ச்சங்கம் தனது குறிக்கோள்களை அடைவதற்கான நிர்வாக நடைமுறைகளை நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் நிர்வாக்குழுவும் அறங்காவலர் குழுவும் செயல்படுத்துகின்றன.  ஜனநாயக முறைப்படி ஆயுட்கால உறுப்பினர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பதினோரு நபர்களாலான  நிர்வாகக்குழு மற்றும் ஐந்து நபர்களாலான அறங்காவலர் குழு ஆகிய இரண்டு அமைப்புகளும்  சங்கத்தை நிர்வகிக்கின்றன..நிர்வாகக்குழு சங்கத்தின் பொது மேலாண்மையையும் சங்கத்தின் குறிக்கோள்களுக்கு ஏற்ப, கலை , கலாச்சாரம், கல்வி மற்றும் பொது நலச் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. சங்கத்தின் அறங்காவலர் குழு சங்கத்தின் அசையா சொத்துக்கள் அனைத்தையும் திறம்பட மேற்பார்வை செய்து பாதுகாத்து அவற்றை மேம்படச் செய்து வருகிறது. இரு குழுக்களும் முறையான வேலைப்பகிர்வு மற்றும் அதிகாரப் பகிர்வுடன் தங்கள்  செயல்களை திறம்பட நிர்வகித்து வருகிறார்கள். தற்போது  நிர்வாகக்குழுவுக்கு திருமதி ராஜஸ்ரீ நாகராஜன் அவர்களும் அறங்காவலர் குழுவுக்கு திரு எஸ். ஏகாம்பரம் அவர்களும் தலைவர்களாகப்  பொறுப்பு வகித்து வருகிறார்கள்.

முக்கிய முன்னெடுப்புகள் மற்றும் நிகழ்வுகள்

  • சங்கத்தின் தொடக்க காலத்திலிருந்து தமிழ் மொழி வகுப்புகள் கட்டணமில்லாமல்  நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பில் தமிழ் மொழி பேசும் மாணவர்களுடன் பிற மொழி மாணவர்களும் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.
  • 2002ஆம் ஆண்டிலிருந்து இளைய தலைமுறையினர் திருக்குறளின் மேன்மையை உணரும் வகையில்  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்குப் பங்கேற்பு பரிசும் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
  • 2004ஆம் ஆண்டில் நவி மும்பை தமிழ்ச்சங்க நிர்வாகிகளின் அரும் முயற்சியால் . சங்க  வளாகம் அமைந்திருக்கும் சாலைக்குத் ‘திருவள்ளூவர் சாலை’ என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டுதல் நடைபெற்றது
  • 2005ஆம் ஆண்டு நவிமும்பை தமிழ்ச்சங்கம் மராத்திய மாநிலத்தின் அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மராத்திய மாநிலத்தின் முதல் தமிழ்மாநாட்டை சிறப்பாக  நடத்தியது.
  • 2008ஆம் ஆண்டு நவி மும்பை தமிழ்சங்கத்தின் புரவலரும் உலகத்தமிழ் சங்கத்தின் நிறுவனருமான திரு. வி.ஜி. சந்தோஷம் அவர்கள் நவிமும்பை தமிழ்சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கிய  ஏழரை அடி உயரமும் ஒன்றரை டன் எடையும் உள்ள திருவள்ளுவனார் திருவுருவச்சிலை சங்க வளாகத்தில்  நிறுவப்பட்டது.
  • கடந்த ஒன்பது வருடங்களாக நவிமும்பை தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விச்சேவை நிறுவனத்திடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ளதமிழ்ப் பாடப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்று அவற்றை சங்கத்தின் செலவில் நவிமும்பைக்குப் போக்குவரத்து செய்து அந்தப் புத்தகங்களை மராத்திய மாநிலத்தில் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
  • நவிமும்பை தமிழ்ச்சங்கம் 2016ஆம் ஆண்டு முதல் தமிழ் நாடு இணையக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தொடர்பு மைய்மாக இயங்கி வருகிறது. இந்த மையத்தின் மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் பங்கேற்று  சிறந்த மதிப்பெண்களுடன் சான்றிதழ்களைப் பெற்று வருகிறார்கள்.
  • நவிமும்பை தமிழ்ச்சங்கம் உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளை நவி மும்பையில் நடத்தி, அவற்றை  அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது
  • நவிமும்பை தமிழ்சங்கம் தமிழர் திருநாளான பொங்கலையொட்டி உறுப்பினர்கள் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் சங்க நலன் விரும்பிகளுக்கு பொங்கல் விழா அறுசுவை விருந்து வழங்கி வருகிறது. இதில்  ஆண்டுதோறும் சுமார் 1500 நபர்கள் பங்கேற்கிறார்கள்.
  • சங்கத்தில் திருவள்ளுவர் தினம் கோண்டாடப்படுகிறது. அனைத்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவ்ர்களும் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள்.
  • நவிமும்பை தமிழ்ச்சங்கம் ‘மக்கள் குடியரசுத் தலைவர்’ என்று  போற்றப்படும் முனைவர் திரு. அப்துல் கலாம் ஐயா, அவர்களது பிறந்த நாளை ‘இளைஞர் திறன் ஊக்குவிப்பு’ நிகழ்வாகவும்  கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்த நாளை பாட்டுப் பாட வா’ என்ற இசை நிகழ்ச்சியாகவும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
  • இளைய தலைமுறையினரிடம் நாட்டுப் பற்றை வளர்க்க தேச பக்திப் பாடல்களுக்கான ‘வந்தே மாதரம்’  நடன நிகழ்ச்சியை சுதந்திர தினத்தையொட்டி, சங்கம் நடத்தி வருகிறது.
  • சங்கத்தில் மகாகவி பாரதியார் பிறந்த தினக்கொண்டாட்ட நிகழ்வுக்காக  மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி  ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப் படுகின்றன.
  • முத்தமிழில் ஒன்றான   இசையைப் போற்றும் விதமாக நவிமும்பை தமிழ்சங்கம் ‘தமிழ் இசை ஆராதனை’ என்ற நிகழ்வைத் தொடங்கி கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதனைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ‘தமிழ் மூவர்; ஆராதனையுடன் தொடங்கும் இந்த நிகழ்வில் பல்வேறு இசைப்பள்ளிகள் பங்கேற்று தமிழ் இசையை, மராத்திய மண்ணில் நிலைபெறச் செய்து வருகின்றன.
  • உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்களும் சிந்தனையாளர்களும் பங்கேற்கும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் மற்றும் சொல்லரங்கம் நகைச்சுவையரங்கம் ஆகியவை நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.
  • சங்கத்தின் அகில உலக மகளிர் தின விழாவின் ஒரு அம்சமாக இலவச மருத்துவ முகாம், மகளிர் வணிகத்திறன் மேம்பாட்டுக்கான கண்காட்சி, சமையல் திறன் வெளிப்பாடு ஆகியவற்றுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள மகளிருக்கு ‘சாதனையாளர்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
  • அகில உலக முதியோர் தினம், அகில உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஆகியவையும் தேசிய கொண்டாட்டங்களான சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவையும் சங்கத்தில்  சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
  • சங்கத்தில் பரத நாட்டியம், கர்நாடக இசை, மிருதங்கம் கராத்தே, பாலிவுட் நடனம் ஆகியவற்றை கற்பதற்கான வகுப்புகள் நடைபெறுகின்றன.
  • சங்கத்தின் நூலகத்தில் தமிழ் இலக்கியம், நாவல்கள் , சுய முன்னேற்றப் புத்தகங்கள், மற்றும் கவிதைகளிடம் பெற்றுள்ளன.சங்க நூலகம் உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் சேவை செய்து  வருகிறது.
  • நவி மும்பை தமிழ்ச்சங்கம் மாணவர்களுக்கான ‘பேரிடர் மேலாண்மை’ பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளது. இவற்றின்மூலம் நவிமும்பையில் ஏறத்தாழ 15,000 மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்கள்.
  • பேரிடர்  நிகழும்போது நவி மும்பை தமிழ்சங்கம் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகிறது.

விருதுகள்:

நவிமும்பை தமிழ்சங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் கலை இலக்கியம், கல்வி மற்றும்  சமூக நல நிகழ்ச்சிகள் சங்கத்திற்கு மாநிலத்திலும், தேசிய நிலையிலும்  உலகளாவிய முறையிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன.

மாலத்தீவில் மாலத்தீவுப் பல்கலைக் கழகமும் இந்திய மாலத்தீவு நட்பு கழகமும் இணைந்து நடத்திய அகில உலக தமிழ் மாநாட்டில் நவிமும்பை தமிழ்ச்சங்கத்திற்கு ‘இந்தியாவின் சிறந்த தமிழ்ச்சங்கம்’ என்ற விருது வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகமும் தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய மாநாட்டில் நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு ‘தலை  சிறந்த தமிழ்ச்சங்கம்’ என்ற விருது வழங்கப்பட்டது.

மராத்திய அரசின்’ கௌரவ சம்மான்’ விருதைப் பெற்ற பெருமை நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்கே உரியதாகும்.

விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் ‘திருவள்ளுவர்’ விருதையும் நவிமும்பை தமிழ்சங்கம் பெற்றுள்ளது.

அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போலத் தமிழக அரசின் ‘தமிழ்த்தாய்’ விருதை அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் திருக்கரங்களால் பெற்ற பெருமையும் நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்கே உரியதாகும்.

சமீபத்தில் நவி மும்பையில் நடைபெற்ற கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வில் நவிமும்பை தமிழ்ச்சங்கத்திற்கு ‘சிறந்த தமிழ்ச் சங்கம்’ என்ற விருது வழங்கப்பட்டது

வருங்காலத் திட்டங்கள்

சங்கத்தின் தொழிநுட்ப வசதிகளை மேம்படுத்தி சங்கத்தின் கலை கலாச்சாரம் மற்றும் சமூக நல முன்னெடுப்புகளைப் பெருக்குவதே சங்கத்தின் வருங்காலத் திட்டமாகும்.ள்ளப் பட்டு வருகின்றன.

*XGBE*