தகுதி :- நவிமும்பை நகர எல்லைக்குள் வசிக்கும்,  பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் ,  நவிமும்பை தமிழ்ச்   சங்கத்தின் உறுப்பினர் உரிமை பெற, ,சங்கம் தொடர்பான பொதுச் சட்ட விதிமுறைகள் மற்றும் நவிமும்பை சங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட முறையில்,செயல்பட்டு , அங்கத்தினர் ஆவதற்கான  சந்தாத்  தொகையை செலுத்துதல் வேண்டும். மேற்படி சந்தாத் தொகை , சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் அல்லது சிறப்பு பொதுக் குழுக்  கூட்டத்தில் அவ்வப்போது  நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி நிர்ணயிக்கப்படும்

விண்ணப்பம்: அங்கத்தினர் ஆவதற்கான விண்ணப்பம் அதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முறையாக  பூர்த்தி செய்யப்பட்டு,, அங்கத்தினர் சேர்க்கைக்கான தொகை மற்றும் குறிப்பிட்ட  உறுப்பினர் உரிமைக்கான  சந்தாத் தொகையுடன் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்..

பரிசோதனை : நிர்வாகக்குழு தங்களிடம் சம்ர்ப்பிக்கப்படும்  உறுப்பினர் உரிமைக்கான விண்ணப்பத்தை பரிசோதித்து , அதற்கு இடைக்கால ஏற்பு  அளித்து பொதுக்குழு அங்கீகரிப்புக்கு  பரிந்துரை செய்யலாம் அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். அவ்வறு நிராகரிக்கப்பட்ட  விண்ணப்பதாரர் பொதுக்குழுவிடம் முறையீடு செய்யலாம். .அத்தகைய சூழ்நிலையில் பொதுக்குழுவின் முடிவே இறுதியானதாகும்.  

:-அங்கத்தினர் சேர்க்கை  மூன்று வகைப்படும். 1.புரவலர் அங்கத்தினர் 2. ஆயுட்கால அங்கத்தினர் 3. வருடாந்திர  அங்கத்தினர் .அங்கத்தினர்களது து வகைக்கு ஏற்ப அவர்களது சந்தாத் தொகைகளும் பொறுப்புகளும் உரிமைகளும் நிர்ணயிக்கப்படும்.