நமது சங்க அங்கத்தினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆக்கபூர்வமான திறனை ஊக்குவிக்க மூன்று நிகழ்நிலை (ஆன் லைன் ) போட்டிகளை வடிவமைத்துள்ளோம். வெற்றியாளர்களின் திறன் உலகளாவிய நிரந்தர வலைப்பதிவு பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களைக் கொண்ட பாட்டுப் போட்டி
- கவியரசரின் தத்துவப் பார்வை – கட்டுரைப் போட்டி
- “கவியரசரை போற்றுவோம்” – கவிதைப் போட்டி.
போட்டிகளில் “வெற்றி பெறும் பாடகர்களின் பாட்டுகள் , கவிதைகள், கட்டுரைகள் வரும் ஜூன் மாதம் கவியரசரது பிறந்த நாளன்று நமது சங்கத்தின் வலைத்தளத்திலும் சங்கத்தின் கட்செவி (வாட்ஸ் அப்) குழுவிலும் பதிவு செய்யப்படும்.
போட்டிகள் பற்றிய விவரங்கள் மற்றும் விதிமுறைகளை அங்கத்தினர்களின் மேலான கவனத்திற்காக இவண் வழங்குகிறோம்.
- ஒரு அங்கத்தினர் அல்லது அவரது குடும்பம் ஒரே ஒரு பாடலை (90 வினாடிகளுக்கு மிகாமல்)மட்டுமே வீடியோ பதிவாக அனுப்பலாம்.
- வீடியோவில்( karaoke) கரோகி முறையில் பின்னணி இசையுடனோ, அல்லது பின்னணி இசை இல்லாமலோ எப்படி வேண்டுமானாலும் பாடல் பதிவு செய்யலாம்.
- பாடகர் தேர்வு தகுதி வாய்ந்த தொழில் முறை இசைக்கலைஞர்கள் குழுவால் செய்யப்படும்.
- ஒரு அங்கத்தினர் குடும்பம் ஒரு கவிதை மற்றும் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம்.
பாடல் பதிவு செய்து அனுப்ப கடைசி நாள் 5-5- 2020.
இதை கட்செவி (WhatsApp) மூலம் அனுப்பக் கோருகிறோம். அனுப்ப வேண்டிய எண் 9969784863.
இதன் அடிப்படையில் முதல் சுற்றுத் தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் பாடகர்கள் கவியரசரின் ஒரு பாடலை முழுவதுமாகப் பாடி அந்தக் காணொளியை இறுதிச் சுற்றுக்காக அனுப்ப வேண்டும்.
போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்களைப் பற்றிய சுயகுறிப்பு அனுப்புதல் வேண்டும் : நேரடியாக பதிவு செய்ய – bit.ly/NMTS4kkக்ளிக் செய்யவும்
- அனுப்புவர் பெயர்
- ஆயுட்கால உறுப்பினர் எண்.
- அங்கத்தினர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆக இருந்தால் அவரது உறவுமுறை
- வயது
- இணையதள முகவரி
- தொடர்பு எண்.
- உறுதிமொழி
ஒரு அங்கத்தினர் அல்லது அவரது குடும்பம் ஒரே ஒரு பாடலை (90 வினாடிகளுக்கு மிகாமல்)மட்டுமே வீடியோ பதிவாக அனுப்பலாம்.
வீடியோவில்( karaoke) கரோகி முறையில் பின்னணி இசையுடனோ, அல்லது பின்னணி இசை இல்லாமலோ எப்படி வேண்டுமானாலும் பாடல் பதிவு செய்யலாம்.
பாடகர் தேர்வு தகுதி வாய்ந்த தொழில் முறை இசைக்கலைஞர்கள் குழுவால் செய்யப்படும்.
ஒரு அங்கத்தினர் குடும்பம் ஒரு கவிதை மற்றும் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம்
பாடல் பதிவு செய்து அனுப்ப கடைசி நாள் 5-5- 2020. இதை கட்செவி (WhatsApp) மூலம் அனுப்பக் கோருகிறோம். அனுப்ப வேண்டிய எண் 9969784863.
இதன் அடிப்படையில் முதல் சுற்றுத் தேர்வு நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பாடகர்கள் கவியரசரின் ஒரு பாடலை முழுவதுமாகப் பாடி அந்தக் காணொளியை இறுதிச் சுற்றுக்காக அனுப்ப வேண்டும்.
இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் பாடகர்களின் புகைப்படங்களும் பாடல்களும் நமது சங்க வலைத்தளத்தில் இடம் பெறும்.
கவிதை ( 100 வார்த்தைகளுக்கு மிகாமலும் ) கட்டுரை (150 வார்த்தைகளுக்கு மிகாமலும்) word &PDF பதிவாக nmtamilsangam@yahoo.in என்ற இணைய முகவரிக்கு 7-5-2020க்குள் அனுப்பக் கோருகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களின் புகைப்படங்களும் படைப்புகளும் வலைத்தளத்தில் இடம் பெறும்.
இணையதள தொடர்பின்மை போன்ற தொழில்நுட்ப காரணங்களால் பங்கேற்பு படிவம் மற்றும் பாட்டு/கட்டுரை /கவிதை அனுப்புவதில் சிறிய கால தாமதம் ஏற்பட்டால் அத்தகைய படிவங்களை ஏற்பது குறித்து நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானதாக இருக்கும்
நடுவர் குழுவின் முடிவு இறுதியானது.
கட்டுரை மற்றும் கவிதை இந்தப் போட்டிக்காக புதிதாக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். அனுப்புபவரது *சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்
10.கவிதை மற்றும் கட்டுரை தனது சுய படைப்பு என்பதையும் அது வேறு எங்கும் பிரசுரிக்கப் படவில்லை என்பதையும் அனுப்புபவர் எழுத்து மூலம் உறுதிமொழி அளித்து தெரிவிக்க வேண்டும்.
11. ஒரு அங்கத்தினர் குடும்பம் மூன்று போட்டிகளிலும் பங்கேற்று மகிழலாம்
நன்றி
செயலாளர்
நவிமும்பை தமிழ்ச் சங்கம்