கவியரசர் கண்ணதாசனின் தத்துவப் பார்வை

இப்போட்டியில் முதலிடம் பெற்ற திரு. ரா. சிவகுமார்
அவர்களுக்கு கவியரசரின் தத்துவப் பார்வை பற்றிய
விரிவான கட்டுரை வழங்கும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார்,
பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த
கவிஞர்கள் ஆவர்.
இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக்
கொண்டிருக்கிறார். பிறப்பு, வளர்ப்பு, சடங்கு, சம்பிரதாயம், காதல், காமம்,
திருமணம், சிக்கல், பிரச்சினை, வாழ்க்கை, உறவு, பிரிவு, வெறுப்பு, அமைதி,
தத்துவம், மரணம் என்று அவர் தொடாத எல்லை, இல்லை! ஒரு படைப்பு, நம்
ஆன்மாவைத் தொடவேண்டும். கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் நம்
ஆன்மாவை வருடிவிடுபவை. நம் ஆன்மாவுக்குள் ஓயாது அடித்து
அலைக்கழிக்கும் அலையும் அவரே. நம் ஆன்மாவுக்குள் அமைதியை
நிலவச்செய்யும் ஆழ்கடலும் அவரே.
.

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே வளர்

பொதிகை மலைதோன்றி

மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே’’

என தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம். தமிழுடன் குழந்தையை
ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் போற்றுதற்குரியதாக உள்ளது. கவிஞரின்
இக்கூற்று இளங்கோவடிகள் தமிழைப் புலவர் நாவில் பொருந்திய
பூங்கொடியாகப் போற்றும் தன்மையுடன் ஒப்புநோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
விரக்தியில் வாடும் கவைக்குதவாத குடிகார அண்ணன் பாடுவதுபோல
காட்சியமைப்பு இருந்தாலும், அந்தப் பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும்
மறுப்பதற்கியலா எதார்த்த தத்துவார்த்தங்களைக் கொண்டது என்பதை
அனைவரும் ஏற்றுக் கொள்வர்
.

“நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி…”

என்ற வரிகள்… ”

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமாற் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி”

சித்தர்கள் அந்தமாய்க் கூறிய தத்துவங்களையும், வேதத்தின் அந்தங்களையும்
சிறு கேலியாகக் குறிப்பிட்டு, தன்னையே உணர்ந்து கொண்டு ஞானம்
பெறுவதென்பது குறிக்கோள் எனவும் அழகாய்க் குறிப்பிடுகிறார் கவியரசு.
ஆயிரம் வேதங்களைக் கற்றாலும், தன்னை உணரும் வரை
ஞானமில்லையென்பது அனைத்து தத்துவ ஞானிகளாலும் போதிக்கப் பட்ட
பாடமே.
மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் கண்முன்னே எதிர்ப்படையில்
அணிவகுத்து நிற்கும் உறவினர்களையும், குருக்களையும், பால்ய
பருவத்திலிருந்து வந்த நண்பர்களையும் கண்ட அர்ஜுனன் செயலிழந்து
காண்டீபத்தைக் கீழே போட்டுவிட்டு விரக்தி அடைகிறான். பெரும்பாலான
சாதாரண மனிதர்களுக்கு இதுபோன்ற செயலிழந்த நிலை ஒருமுறையாவது
தோன்றியிருக்கும் என நினைக்கிறேன். அப்பொழுது பகவான் கிருஷ்ணன்
பார்த்தனுக்குக் கூறும் கர்மயோக நூலாகப் பிரசித்தி பெற்றது பகவத் கீதை. பல
செய்யுள்களைக் கொண்ட இந்த நூலின் சாராம்சத்தை ஒரு திரைப்படப் பாடலில்
எவ்வாறு கூறுகிறார் பாருங்கள் நம் கவியரசர்;

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!…
மரணத்தின் தன்மை சொல்வேன்!…
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது…
மறுபடி பிறந்திருக்கும்!…

மேனியைக் கொல்வாய்… மேனியைக் கொல்வாய்…
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி,
வென்றுதான் தீரும்… ஓர் நாள்… ஆஆஆஆஆ

மேனிக்கும் ஆன்மாவிற்குமான வேறுபாடுகளையும் ஒரு வீரன் தான்கொண்ட
கொள்கைக்கான கடமைகளையும் மூன்றே பத்திகளில் முழுமையாய்ச்
சொல்லியிருப்பார் அந்தப் பாடலில். இந்தப் பாடலிலும் மரணமடையா
ஆன்மாவின் தன்மைகளைச் சிறு குறிப்பால் விளக்கியிருப்பார் கவிஞர்.
தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற படத்தில் வந்த மனதை வருடும்படியான
பதமான இசையில் பொழிந்த தத்துவப் பாடல்…
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

வாழ்க்கையைக் கடலாகவும் அதில் இடையராது தோன்றி மறையும் அலைகளை
ஆசைகளாகவும் உருவகப் படுத்தி, அதில் கிடந்து உழலும் மனிதர்களின்
நிலைப்பாடு குறித்து விளக்கிடும் பாடலிது. இதில் எதிர்பாராத நிலையில்
தானாக விளையும் துன்பங்களையும் இன்பங்களையும் குறித்து இவ்வாறு
கூறிகிறார் கவியரசு;

சூறைக் காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு… சுகம் செலவு..

இருப்பது கனவு

காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

தத்துவ விளக்கம் பெரிதாக இருந்திராத பருவத்தில் “துன்பம் எப்படி வரவாகும்?
இன்பம் எப்படி செலவாகும்? இதை மாற்றியல்லவா சொல்லியிருக்க வேண்டும்”
என்று நாம் சிந்தித்ததுண்டு. “செயல் விளைவு” தத்துவத்தின் சாராம்சம் விளங்க,
கவியரசின் இந்தப் பொன்னான வரிகளின் அர்த்தமும் விளங்கியது.
“நான் நிரந்தரமானான் அழிவதில்லை”

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற வரிகளுக்கூடாக
வெளிப்படுகிறது.
அக்டோபர் 17, 1981. ஆண்டுகள் கடந்து இன்னும் ஆயிரம் போயினும் தேவை
உள்ளவரை இந்த தெய்வமும் வாழும்!
வாழ்க கவியரசரின் தத்துவப் பார்வை! வளர்க அவர் புகழ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.