கவியரசரைப் போற்றுவோம்.

Poem3

கண் எதிரே தோன்றினாய்
கவைதகள் கலந்து காண்கிறாய்
காவியத் தலைவனாகத் திகழ்கிறாய்.
காதல் பாட்டுகளின் திலகமாய்
பாமர மக்களின் பார்வையில்
இன்னிசை இசையில் இயங்கினாய்
பாட்டும் நீயே பாவமும் நீயே
பாசமும் நீயே நேசமும் நீயே
பாட்டுப் பாடி மயக்கினாய்
பார்த்துப் பேசி கலக்கினாய்
இளமையின் இனிமையில் ஏங்க வைத்தாய்
எழில் தென்றலின் தனிமையில் வாட வைத்தாய்
காலையும் நீயே மாலையும் நீயே
கவிதை என்ற கண்களும் நீயே
சினிமா பாடல்களில் என்னை சிலிர்க்க வைத்தாய்
கான மழையில் என்னை நனைய வைத்தாய்
சிற்பிகள் போல் கற்களில் கவிதை அமைத்தாய்
காலமெலாம் கேட்டுருகக் கவிதை தந்தாய்
கார்மேகம் கருத்தாலும் கவிதைகள் கருத்தாழம் குறையாது
காணக் கண்கோடி வேண்டும். காதுகளில் ரீங்காரம் கேட்கும்
காலமெலாம் காத்திருப்பேன் உன்
காவியக் கவிதைகள் கேட்டிருப்பேன்
.கவிஞன் கண்ணதாசனே கவிதைக் கடவுள்!

– மூன்றாம் இடம் திரு. C K. .சுப்ரமணியம்

This Post Has 2 Comments

  1. C.K.RAMANI

    THANKS TAMIL SANGAM FOR ALL THE ENCOURAGEMENT

  2. C.K. SUBRAMANIAM

    THREE CHEERS TO ALL THE WINNERS. THE JUDGES HAVE DONE A COMMENDABLE JOB IN PICKING THE BEST.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.