சிறப்புக் கட்டுரை – ரேணுகா ஜெ. (எட்டாம் வகுப்பு)
கண்ணதாசன் என்ற மகா கவிஞரின் தத்துவப் பாடல்கள் நம்மை
மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவை நமது உள்ளுணர்வை தட்டி
எழுப்புகின்றன. மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டுவதைல் அவர்
வரிகலை மிஞ்சி எதுவும் இல்லை.
வெற்றி வந்தால் பணிவு அவசியம்தோல்வி வந்தால் பொறுமை
அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்எது வந்தாலும் நம்பிக்கை
அவசியம்.
இன்னொரு பாடலில் உலகம் மற்றும் மனிதனின் குணத்தை விளக்கும் வகையில்
‘உயர்ந்த இத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.’ என்கிறார்.
பாமர மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிறைய சமுதாய கருத்துக்களைத் திரைப்பட
பாடல்கள் மூலம் வழங்கியுள்ளார்.
‘விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை
.உடல் உண்டு உள்ளம் உண்டு முன்னேறு முன்னேறு மேலே மேலே
இது எந்தக் காலத்துக்கும் பொருத்த்மான பாடல்என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
ஆசை, கோபம் களவு கொண்டவன் பேசத்தெரிந்த மிருகம்
– அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வாழ்வில் தெய்வம்’
இவ்வாறு கவியரசர் மக்களோடு ஒன்றாக இணைந்து கவிதைகளைத் தத்துவங்களாக
வடித்திருக்கிறார். இன்றும் அவரது தத்துவங்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் ஒன்றாகத் திகழ்கிறது