இரண்டாம் இடம் – ஆர். ஜெயகாமாட்சி
கவியரசர் பல தத்துவப் பாடல்களைப்
பாடியிருக்கிறார். நம்து அன்றாட வாழ்க்கைக்கு அவர்
சொன்ன சிலவற்றை இங்கு எழுதியுள்ளேன். த்துவம்
என்பது அவர்தம் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட
அனுபவங்கலே. அவரது தத்துவப் பார்வை
கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.
நமக்குப் பூறுப்புக்கள் வரும்வரை நாம் இன்பமாக
ஆடித் திரிகிறோம். “குரங்குகள் போலே மரங்களிலன்
மீது ஆடித் திரிந்தோமே” என்று பாடியுள்ளார். பொறுப்புகள் வந்தவுடன்
மண்டிதனுக்குக் கவலை, பயம் எல்லாம் வந்துவிடுகின்றன. ‘எப்படி வாழ்வது?’
என்று புரியாமல் தவிக்கிறான். அதற்கு கவியரசர் ‘”வாழ நினைத்தால் வாழலம்
வ்ழியா இல்லை பூமியில்” என்கிறார்.அவர் நாத்திகத்தில் இருந்து ஆத்திகராக
மாறிய பிறகு இந்துமத்தை முழுமையாக நம்பினர். இறைவன் இருக்கிறான்
என்று நம்புங்கள் என்று மக்களுக்கு வலியுறுத்தினார். “இறைவன் வருவான் –
அவன் என்றும் நல்லது தருவான்” என்றார்.நம்முடைய இன்னல்களையெல்லாம்
போக்கி எப்போதும் உறுதியாக நன்மை செய்வார் என்றார். “இறைவனை
நம்புங்கள்” என்று ஏடுத்துரைத்தார்.
உலகில் நம்மால் மாற்ற முடியாதது என்று ஒன்று இருக்கிறது. அது நாம்
பிறந்த குடும்பம். இதை அவர் “ அம்மா ஆண்டவன் வடிவில் வருவாள்
என்றும்பெற்றோர் காக்கப்படவேண்டியவர்கள், உடன்பிறந்தோருடன் பாசமாக
இருக்க வேண்டும் என்றும் பாடி வலியுறுத்துகிறார். துக்கம் என்பது பூர்வ ஜன்ம
பாவம் ‘ என்றும் யாக்கை நிலையாமையை’போனால் போகட்டும் போடா’
எனவும் உணர்த்துகிறார். இன்று அவர் பாடல்கள் வீடுதோறும் அனைத்து
நிகழ்வுகளிலும் இடம்பெற்று வருகின்றன. தமிழ் இனம் உள்ள்வரை அவரது
த்துவக் கருத்துக்கள் பாடலாகவும் கட்டுரைகளாகவும் ஒலித்துக் கொண்டே
இருக்கும். இதைத்தான் அவர் “ நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று பாடியுள்ளார்.