கவியரசரின் தத்துவப் பார்வை

essay 3

மூன்றாம் இடம் திருமதி பேபி ராணி

முன்னுரை:
கவியரசரின் தத்துவங்கள் ஒன்றா? இரண்டா? எதைச் சொல்வது ?
எதை விடுவது? என்று குழம்பும்போது ஆவற்றில் பலவற்றை விட்டு,
சிலவற்றை தேர்ந்தெடுக்க நமக்கு ‘இரண்டு மனம் வேண்டும்’. மனித
வாழ்க்கையின் அடிப்படையே தத்துவங்கள்தானே?
பொருளுரை
‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரிவாரி வழங்கும்போது
வள்ளல் ஆகலாம்” இவ்வரியில் வள்ளல் தன்மை மனிதனுக்கு மட்டுமே
உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
‘போனால் போகட்டும் போடா- இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?’ என்று கேட்டு
யாக்கை நிலையாமையை எடுத்துச் சொன்னவரும் இவர்தான்.
‘இரவும் வரும் பகலும் வரும் இயற்கை ஒன்றுதான். உறவும் வரும் பிரிவும் வரும் உலகம் ஒன்றுதான்
என்று யதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை- நடந்ததையே நினத்திருந்தால் அமைதி
என்றுமில்லை’ என்று எடுத்துச் சொல்லி மனிதன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்ற
முறைமையை நமக்கு விளக்கியுள்ளார்.
உள்ளவர் எல்லாம் நல்லவர் ஆவார்-இல்லாதவரே பொல்லாதவர் இந்த பூமியிலே’ என்றும் ‘உன்னைச்
சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த
குற்றமடி’ என்றும் சொல்லி சமுதாய வாழ்வின் நடைமுறையை வகுத்துக் காட்டுகிறார் கவியரசர்.
‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்- இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்’ என்று
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழச் சொன்ன கவியரசர் கூறியுள்ள முத்தான தத்துவங்களை
வழிகாட்டியாக அடையாளம் கண்டு அவற்றின் வழி நடந்து நாடும் வீடும் உயர வழிவகுப்போமாக!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.