ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட நிலையிலும் நமது சங்கத்தின் தமிழ் மொழி
வளர்ப்புச் சேவை தொடர்ந்து நடைபெற்றது. நமது ஆயுட்கால உறுப்பினர் திரு.
சங்கரநாராயணன் (ஆ.உ.எ.720) அவர்களது மனைவியாரான திருமதி கனகவல்லி அவர்கள்
கரோனா சோதனைக் காலத்தை தமிழ் வளர்ப்பு சாதனைக் காலமாக மாற்றி அமைத்துக்
கொண்டார். அவர் இணைய தளம் மூலம் தமிழ் மொழி வகுப்புகள் எடுத்து , மும்பை
நவிமும்பையைச் சேர்ந்த 22 மாணவர்களை , ஜூன் மாதம் நமது சங்கத்தின் தமிழ் இணையக்
கல்விக் கழக மாணவர்களாகப் பதிவு செய்தார். திருமதி கனகம் இந்த மாணவர்களுக்கு
இணையக் கல்விக் கழகத்தின் பாட திட்டத்தின்படி, இணைய வழி வகுப்புகளைத் தொடர்ந்து
நடத்தி வருகிறார்.
ஆகஸ்டு 15ஆம் தேதி இணையக் கல்விக் கழக மாணவர்கள் கலை நிகழ்ச்சி:
நம் இணையக் கல்விக் கழகத்தில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்களது
ஆசிரியையான திருமதி கனகவல்லி அவர்கள் சுதந்திர தின விழாவை ஒட்டி, நாட்டுப்
பற்றுப் பாடல், கட்டுரை, நடனம், வாத்திய இசை வரைதல், மாறுவேடம் போன்ற பல
நிகழ்வுகளை இணைய தளம் வழியாக நடத்தி ஊக்குவித்தார். சங்க மாணவர்களின்
கலைத் திறனை ஊக்குவிப்பதற்காக இந்த நிகழ்ச்சி நமது சங்க வலைத் தளத்திலும் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 15ஆம் தேதி மகளிர் சிறப்பு நிகழ்வு:
ஆகஸ்டு 15ஆம் தேதியன்று நமது சங்கத்தின் மகளிர் ஆயுட்கால உறுப்பினர்களும்,
அங்கத்தினர்களின் மனைவியரும் தங்களது ‘இணைந்த கைகள்’ அமைப்பு மூலம் ஒரு
சிறப்புக் கும்மி நிகழ்வை இணையதளம் மூலம் நடத்தி சுதந்திர தின விழாவைச் சிறப்பாக்
கொண்டாடினார்கள்.நமது சங்க அங்கத்தினர் திருமதி பிரசன்னா வெங்கடேஷ்
(ஆ.உ.எ.724) அவர்கள் இந்தக் கும்மி நடந்த்துக்கான பாடலை இயற்றிப் பாடியுள்ளார்.
சங்க அங்கத்தினர் திரு. எஸ். சுந்தர ராஜன் (ஆ.உ.எ.422) அவர்களது மனைவி திருமதி
பூமா சுந்தர ராஜன் அவர்கள் இந்த கும்மி நடனத்தை இயக்கி ஒருங்கிணைப்பு
செய்துள்ளார்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க தமிழர்!!!
தமிழுக்கு அமுதென்று பேர், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்!
வாழ்க வளமுடன்.
தங்கள் சங்க பணிகளை இணைய வாயிலாக படித்துணர முடிந்தது. சிறப்பாக செயல்படும் உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி
அன்புடன்
தலைவர் – தமிழ்நாடு தமிழ்ச்சங்க திருப்பூர் மாவட்டம்
நிறுவனர் – நடவு பதிப்பகம் மற்றும் நடவு சமூகநல மையம்
Jc Dr. எஸ்ஏ. முத்துபாரதி
38 ராயபுரம்
திருப்பூர் – 641 601
96882 63329 ஃ 86109 87533
tiruppurbharathi@gmail.com
FB : Muthu Baarathi
muthubaarathi.blogspot.in